எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதுவரை 3618 "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,14,260 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி  உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.