விளாத்திகுளம் அதிமுக வேட்பாளரை சாமி கும்பிட அனுமதிக்க
மறுத்ததால் திமுக அதிமுகவினர்
இடையே கைகலப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி
அதிமுக வேட்பாளர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் அயன்கரிசகுளம்,
வெம்பூர்,
மெட்டில்பட்டி
உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டிருந்தார்,அப்போது வெம்பூர் கிராமம் உத்தண்ட சுவாமி திருக்கோவில்
முன்பு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்,தற்போது
உத்தரண்ட சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரச்சாரம் முடிந்த பின்
வேட்பாளர் சத்யா அதிமுகவினருடன் உத்தண்ட சாமி
திருக்கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய முன்றார்.
அப்போது கோவில் முன்பு இருந்த நின்றபோது திமுக நிர்வாகி லட்சுமணன் கோவிலுக்குள்
வரக்கூடாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர்
கடும் கோபம் அடைந்தனர், இதனைத் தொடர்ந்து கோவிலில் து திமுக நிர்வாகி லட்சுமணனுக்கும்
அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை பாதுகாப்பு பணியில்
இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.