விளாத்திகுளம் அருகே தேள் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சப்பனூத்து கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கமலேஷ் (15), இவர் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுன் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, கமலேசை கொடிய விஷம் கொண்ட கருந்தேள் கடித்துள்ளது, இதனை அடுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...