விளாத்திகுளம் அருகே கடல் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் ரூ.7.045 இலட்சம் மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்கள் (Turtle Excluder Device) விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி!



தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீனவர்களுக்கு ஆமை விலக்கு சாதனங்களை (Turtle Excluder Device) விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 48.14 லட்சம் மதிப்பீட்டில் 205 ஆமை விலக்கு சாதனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 முடிய கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழ்நாடு கடற்பகுதியில் அவற்றை பாதுகாத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


அவற்றுள் முக்கியமாக கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரை திறனுக்கும் அதிகமாக திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பாராம்பரிய மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மற்றும் திருக்கை மீன்வலைகள் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது. 


மேலும், கடல் ஆமைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் (Nodal Task Force) வழிகாட்டுதலின்படி, கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டும் மற்றும் 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளின் இயக்கத்தினை ISRO டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட நப்மித்ரா இணையவழி செயலி மூலம் கண்காணித்தும், கடல் ஆமைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேற்கண்ட ரோந்து மற்றும் கடுமையான கண்காணிப்பின் அடிப்படையில் விதிமுறைகளை மீறி செயல்படும் மீன்பிடி படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. 

மேலும், வனத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர காவல்துறை, மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களை இணைத்து, மீனவ கிராமங்களில் கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றது. 




ஆமைகளின் நடப்பு இனப்பெருக்க காலக்கட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இது போன்ற 22 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட கடல் ஆமை பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல், மீனவர்களின் மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கும் ஆமை விலக்கு சாதனம் (Turtle Excluder Device) கொச்சியிலுள்ள ஒன்றிய மீன்வள தொழில்நுட்ப நிலைய (CIFT) உதவியுடன் வடிவமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி இழுவலைப்படகுகளுக்கு விலையில்லாமல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 



அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவ கிராமத்தில் 31 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ.7.045 இலட்சம் மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்கள் (Turtle Excluder Device) விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நடைபெற்றது, மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடல் ஆமை விளக்கு வலைகளை விசைப்படகுகளில் எவ்வாறு பொருத்துவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். கடல் ஆமைகளின் இச்சாதனங்களின் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர் .



தமிழக கடல் பகுதியில் Olive Ridiey - yeth ஆமை,Green - பச்சைத்தலையாமை Hawksbill - எலி ஆமை என மூன்று வகை பரவலாக காணப்படுகிறது.


கடல் ஆமைகள் பொதுவாக, கடல்புல் படுக்கைளில் (Seagrass Beds) எனும்பச்சை ஆமைகள் கடற்புற்களை மேய்ந்து, அவற்றை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான கடல் புற்கள் பல மீன் இனங்களுக்கு உணவாகவும், வாழிடமாகவும் அமைகின்றன.

பவளப்பாறைகள் (Coral Reefs),ஹாக்ஸ்பில் (Hawksbill) வகை ஆமைகள் பவளப்பாறைகளில் உள்ள கடற்பஞ்சுகளை (sponges) உண்பதன் மூலம், பவளப்பாறைகள் நன்கு வளர உதவுகின்றன. பஞ்சுகள் அதிகமாக வளரும்போது பவளப்பாறைகளை அழித்துவிடும்.


அதேபோல் jelly fiesh  போன்ற மீன்களை உணவாக உன்று மீனவர்களுக்கு உதவி வருகின்றது.