உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் அருகே தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி!



தமிழகத்தில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு 9 மாணவிகள் உட்பட 110 பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார்.