தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்துச்சாமி(48) முத்துக்குளிக்கும் தொழில் வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரையில் இருந்து முத்துச்சாமி உட்பட 7 முத்து குளிக்கும் தொழிலாளிகள் முத்துக்குளிப்பதற்காக படகில் கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் இருந்தபடியே உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த முத்துச்சாமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக படகில் இருந்த நபர்கள் வேம்பார் கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் கரையில் முத்துச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து, வேம்பார் கடல் காவல் நிலைய போலீசார் முத்துச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
முத்துக்குளிக்க சென்ற நபர் உயிரிழப்பு: கடல் காவல் நிலைய போலீசார் விசாரணை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறிப்பிட்ட சமூகத்தினர் மிரட்டுவதாக பெண் புகார்!
அடுத்த
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026