விளாத்திகுளம் அருகே டிராக்டர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் ராணிசேதுபுரம் பகுதியை சேர்ந்த நாகன் மகன் முருகேசன் (50), மற்றும் கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் முத்துமுருகன் (17) ஆகியோர் இருவரும் டிராக்டர் வாகனத்தில் விளாத்திகுளத்தில் இருந்து கமுதி சென்று கொண்டிருந்தனர், வாகனத்தை முத்து முருகன் ஒட்டி வந்துள்ளார், ராமச்சந்திராபுரம் விளக்கு அருகே டிராக்டர் வாகனம் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த முருகேசன் டிராக்டர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.