விளாத்திகுளம் அருகே  மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக  ரூபாய் 5 லட்சத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வி, நல்லதம்பி, மணிகண்டன் ஆகியோரிடம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்திய , தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபாண்டியன் (59) என்பவர்,தமிழ்ச்செல்வியிடம் ரூபாய் 1,50,000/- பணமும், நல்லகண்ணு என்பவரிடம் ரூபாய் 1,50,000/- பணமும், மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 2,00,000/- லட்சம் பணமும் என மொத்தம் ரூபாய் 5 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து கூறியபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பி கொடுக்குமாறு தமிழ்ச்செல்வி, நல்லகண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் மேற்படி வீரபாண்டியனிடம் கேட்பதற்கு அவர் ஆளுக்கு தலா ரூபாய் 50,000/- ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ரூபாய் 3,50,000/- பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி தமிழ்ச்செல்வி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி தமிழ்ச்செல்வி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட வீரபாண்டியனை கைது செய்து, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.