விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107-வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது!

விசிறி சாமியார் என்று மக்களால் அழைக்கப்படக்கூடிய யோகிராம் சூரத் குமாருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆலயங்கள் நாமகேந்திர தியான மண்டபங்கள் மகா சமாதி உள்ளிட்டவை அமைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.


இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகிராம் சூரத்குமாரின் 107- வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திங்கள் கிழமையான இன்று ஏகாதசி திதியும்,ரேவதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் 10-வது ஆண்டாக யோகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விசிறி விநாயகருக்கு பூஜை,ஸ்ரீமஹாகணபதி.ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்,அதிகாலையில் சிறப்பு யாகசாலை மற்றும் பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது நடைபெற்றது அதனைத் தொடர்ந்து.


அதனைத் தொடர்ந்து நண்பகல் 1 மணி அளவில் பகவான் யோகிராம் சூரத்குமாருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாரணை நடைபெற்றது, இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.