விளாத்திகுளம் அருகே ரூ.32-லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32-லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.20-லட்சம் மதிப்பீட்டில் ஊரணி ஓடையில் சிறிய பாலம் கட்டுவதற்கும், ரூ.45-லட்சம் மதிப்பீட்டில் கற்சாலை அமைக்கவும், ரூ.9-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்திடவும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.