விளாத்திகுளம் அருகே ரூபாய் 24.75 லட்ச மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தில் ரூபாய் 24.75 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ரஞ்சித் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் செல்வகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.