விளாத்திகுளம் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடிமையக் கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பசுவந்தனை ஊராட்சி,ஆலிப்பச்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிமையக் கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்..உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.