அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில்  எட்டையாபுரத்தில் திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது: மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர்!


திமுக கழக தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எட்டயபுரத்தில்  நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் .சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினார்கள். 

மேலும் கடலையூர் அதிமுக கிளைச் செயலாளர் பாலாறு கடலையூர் பார்வேர்ட் பிளாக் கிளைச் செயலாளர் கார்த்திகேயன் கடலையூர் காமராஜ் நகர் அதிமுக வார்டு செயலாளர்  திரு.சக்திவேலன் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். 

நடைபெற்ற கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கிளை செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.