விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு கார்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை - பாளையம்பட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார் (39) மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி (34) ஆகியோர் இருவரும் தங்களது சொகுசு காரில் தூத்துக்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காரை ராம்குமார் ஓட்டி வந்துள்ளார்,கார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மின்சார அலுவலகம் அருகே கார் சென்டர் மீடியாவின் மீது மோதிநிலை தடுமாறி தலைக்குப்புராக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் ராமலட்சுமி மற்றும் ராம்குமார் காயம் ஏற்பட்டது, இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.