விளாத்திகுளம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் RC தெரு பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மோகன் பாக்கியராஜ் (42), இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார், பாக்கியராஜ்க்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் குடித்துவிட்டு சண்டை போட்டுவிட்டு வீட்டில் உள்அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.