விளாத்திகுளம் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழப்பு.




தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் பகுதியை சேர்ந்த சண்முசாமி மகன் கோபால் (43), கூலித் தொழிலாளியான இவர் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உறவினரின் இல்லநிகழ்ச்சிக்கு சென்று விட்டு, குளத்தூர் கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் கோபால் மீது ஏறியதில் தலை நசுங்கி கோபால் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் கோபாலின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.