விளாத்திகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் முத்துராஜ் (35), இவர் குடும்ப பிரச்சனையின் காரணமாக குளத்தூர் தாளபுஷ்பம் என்பவரின் தோட்டத்தில் மதுவில் ( குருணைமருந்து ) விஷம் கலந்து தற்கொலை செய்து சடலமாக கிடந்துள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார், முத்துராஜின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.