விளாத்திகுளம் அருகே மனைவி திட்டியதால் மது போதையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பூபதி (37), இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார், இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை நடப்பதாகவும்  கூறப்படுகிறது, இந்நிலையில் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த பூபதியை மனைவி அழகுராணி குடிக்காமல் உங்களால் இருக்க முடியாதா என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதில் மனவிரக்திஅடைந்த பூபதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதனை அடுத்து பூபதியின் உடலை மீட்ட சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பூபதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.