விளாத்திகுளம் அருகே மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாவில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிமகன் சண்முகம் (67) இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு இவரது மனைவி சின்னமாளை (55) வீட்டில் இருந்த கடப்பாரையால் தாக்கி அடித்து கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அப்போது மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணையானது தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் தீர்ப்பில் நீதிபதி முருகன் குற்றவாளியான சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபதாரம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் மாரிச்சாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.