விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் 45 ஜோடி மாடுகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஸ்ரீ வடக்குவாசெல்வி அம்மன்,ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் ஆடிப்பெரும்திருவிழாவை முன்னிட்டு,ஸ்ரீமான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி, ராமநாதபுரம்,விருதுநகர், மதுரை,தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, சின்ன மாட்டு வண்டிக்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் நீண்ட தூரம் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.