இளம் மாணவிக்கு ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்துள்ளது - குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும் - கனிமொழி எம். பி. பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கனிமொழி எம். பி. செய்தியாளர்களிடம் பேசுகையில்
இளம் மாணவிக்கு ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்துள்ளது ,10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு ஏ டி எஸ் பி தலைமையில் நான்கு டிஎஸ்பிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனி படைகள் செயல்படுகிறது.
குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் முனைப்புடன் எல்லோரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதனை தமிழக முதல்வர் தீவிரகமாக கண்காணித்து வருகிறார், இளம் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.