விளாத்திகுளம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த "அதித்தூதர் மிக்கேல்  திருத்தலத்தில் கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம் : உலக அமைதிக்காக சமாதானப் புறா பறக்கவிட்டு சிறப்பு பிரார்த்தனை : திரளான மக்கள் பங்கேற்பு!





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த "அதித்தூதர் மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பெருவிழாவானது மே மாதம் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பு திருப்பலி பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு 10-ம் நாளன்று  தேர்பவனியுடன் ஆலய பெருவிழாவானது வெகு விமர்சையாக  திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதல் நாளான இன்று ஆலயத்தில் உள்ள  புனித பரலோக அன்னைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றவிருக்கும் திருக்கொடியை கிராமம் முழுவதும்  மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று கொடிஊர்வலம் நடத்தப்பட்டப் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு  கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மலர் மாலைகள், கொடி உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். 


அதுமட்டுமின்றி கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், அனைத்து. மக்களும் நலமுடன் வாழ வேண்டியும் ஆலயத்தின் பங்குத்தந்தைமார்கள் சமாதான புறாவை வானில் பறக்கவிட்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.