முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!




தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான  செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில்,புதூர் அதிமுக மேற்கு,கிழக்கு,நகர் சார்பில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது, நடைபெற்ற பூஞ்சிட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை  விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,புதூர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன்,தனவதி,நகர செயலாளர் ஆண்டி,அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மோகன்  ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.