விளாத்திகுளம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் இந்திய விடுதலைக்கு முதல் வீரம் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், மாட்டுவண்டி எல்கை பந்தயத்தின் மீது தீராதகாதல் கொண்ட “ சிங்கிலிபட்டி முருகன் ” இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெற்ற பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு சிறந்த சாரதியாக வெற்றிவாகை சூடி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவரது மகன் மாதவன் - கோபிகா திருமண விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு எல்கை  நடைபெற்றது.

சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி,திருநெல்வேலி,ராமநாதபுரம்,விருதுநகர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  சுமார் 30  ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியானது சிங்கிலிபட்டி கிராமத்திலிருந்து விளாத்திகுளம் வரை நடைபெற்றது. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, விழாக்குமட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.