விளாத்திகுளம் அருகே மண்டல பூஜையை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஊசிமேசியாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீமுனியசாமி,ஸ்ரீ பொன்மாடசாமி,ஸ்ரீகருப்பசாமி,ஸ்ரீமகா துர்க்கை அம்மன்,ஸ்ரீராமநாதசுவாமி, ஸ்ரீ பர்வனதினிஅம்மன், திருக்கோவில் 48-ம் நாள் மண்டல பூஜை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சின்னமாட்டு வண்டி பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர்,திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன,சின்ன மாட்டுவண்டி பந்தயத்திற்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு போட்டிக்கு போக வர 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.