விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி ராமநாதபுரம் மதுரை விருதுநகர் என பல மாவட்டங்களில் இருந்து  சின்னமாடு பூஞ்சிட்டு என 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தினை புதூர் எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் வெற்றி வேலன் தொடங்கி வைத்தார்.


சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ஓட்டப்பிடாரம் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு மேட்டூர், சக்கம்மாள்புரம் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு சிங்கிலிபட்டி, தெற்கு தீத்தாம்பட்டி மாட்டு வண்டியும் பெற்றன.


இம்மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை மீனாட்சிபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் தேவர் பேரவை இளைஞர் சங்கம், Brave Guys இணைந்து நடத்தினர். மாட்டுவண்டி பந்தயத்தை ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா ரசிகர்கள் பலர் கண்டு ரசித்தனர்.