1 மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியரை மதுரையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த தியாகராஜன் என்ற ஹென்றி(41) அப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் போலீசார் கடந்த மாதம் 16-ஆம் தேதி புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் (எ) ஹென்றி மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தியாகராஜன் ஹென்றியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று தலைமறைவாக இருந்த ஆசிரியர் தியாகராஜ ஹென்றியை தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்து விளாத்திகுளம் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து தியாகராஜன் ஹென்றியிடம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.