விளாத்திகுளம் அருகே மூதாட்டி வளர்த்து வந்த நான்கு கோழிகள் மற்றும் 15 கோழிக்குஞ்சுகளை கொன்றுவிட்டு போக்கு  காட்டிய 5 அடி நீள நல்ல பாம்பு!



தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள அயன் ராஜாபட்டி கிராமத்தினை சேர்ந்த இராமலட்சுமி என்ற மூதாட்டி தனது சொந்த ஓட்டு வீட்டில் குடியிருந்து வருகிறார், வீட்டின் ஒரு பகுதியில் கோழிகளும் வளர்த்து வருகிறார்.. கடந்த 10 நாட்களாக அவர் வளர்த்து வரும் கோழி மற்றும் கோழி குஞ்சுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. மேலும் ஒரு ஒரு பாம்பு அப்பகுதியில் செல்வதையும் பார்த்துள்ளார். இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு அவர் வளர்த்து வந்த சேவலும் பாம்பும் சண்டை போடுவதைப் பார்த்த மூதாட்டி, ராமலட்சுமி, அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் முகமது ஜக்கரியா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் விரைந்து வந்து லாவகமாக ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்து கடந்த வனப் பகுதிக்கு விட்டார்.



கடந்த பத்து தினங்களாக மூதாட்டியின் 15 கோழிக்குஞ்சுகள் , நாலு கோழிகளை நல்ல பாம்பு கொத்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.