விளாத்திகுளம் அருகே முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் தமிழக முன்னாள் முதல்வரும்,  அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு,சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,மதுரை,  திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  24 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன, போட்டியானது புதூரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் நடைபெற்றது. 


நடைபெற்ற போட்டியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கொடியாசைத்து துவக்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன்,தனவதி, நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர் மகேஷ்,ராமச்சந்திரன், போடுசாமி,பால்ராஜ், சிறுபான்மை நலப் பிரிவு சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,மருதுபாண்டி, சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் பெருமாள்சாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.