தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவியை தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  என ஏராளமானோர். தமிழக முதலமைச்சர் அவர்களின் வெள்ள நிவாரண நிதிக்கு நிதி வழங்கி உதவி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழுவின் சார்பாக   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 68,500 நிதி உதவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள  சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினர்.

இந்நிகழ்வில், வட்டார கல்வி வளர்ச்சி துணைச் செயலாளர் சேகர், செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.