விளாத்திகுளம் அம்பாள் நகர் தனியார் மண்டபத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் வெள்ள சேதாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதாரங்கள் குறித்து தமிழக உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரிகள் மழை வெள்ள ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு போர்க்கள அடிப்படையில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன்  அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில்  வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, தோட்டக்கலைத்துறை, உள்ளாட்சித் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஒன்றிய பெருந்தலைவர்கள் பேரூராட்சி மன்ற நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்