விளாத்திகுளம் அருகே கண்கள் இல்லாமல் பிறந்த கோழி குஞ்சு - தாய் கோழியின் சத்தத்தை கேட்டு நகர்ந்து செல்லும் நிலை - அதிசயமாக பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி கிராமத்தைச்சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி முட்டையிட்ட நிலையில், குஞ்சு பொரிப்பதற்காக அதனை அடை வைத்துள்ளார். இந்த நிலையில் அந்தக் கோழி அடைகாத்து 10 கோழிக்குஞ்சுகளை குஞ்சுபொறித்துள்ளது.
இதில் ஒரு கோழிக்குஞ்சுக்கு கண்கள் எதுவும் இல்லாமல் மூக்கு மட்டும் நீளமாக அமைந்தவாறு ஒரு கோழிக்குஞ்சு உள்ளது. கண் இல்லை என்பதால் தனது தாய் கோழியின் சத்தத்தை கேட்டு மட்டும் அந்தக்கோழி குஞ்சு நகர்ந்து செல்கிறது. கண் இல்லாமல் பிறந்துள்ள அந்த கோழி கோழிக்குஞ்சை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.