விளாத்திகுளம் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதல்- ஒரு பெண் காயம்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோயல். இவரது மனைவி ஏஞ்சல் ரம்யா என 6 பேர் சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரத்திற்கு காரில் சென்றுள்ளனர். காரை ஜோயல் ஒட்டி வந்துள்ளார். கார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தலாபுரம் பாலம் அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற பெண்கள் மீது மோதமால் இருக்க ஜோயல் காரை திரும்பிய போது ,, அங்கு நின்று இருந்த வேடப்பட்டியில் இருந்து கோவில்பட்டி சொல்லும் அரசு பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த ஏஞ்சல் ரம்யாவிற்கு காயம் ஏற்பட்டது. காரில் இருந்த மற்ற ஐந்து பேரும் சிறு காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த ஏஞ்சல் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.