விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி 70 வயது முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் கிருஷ்ணசாமி (70) என்ற முதியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டிலிருந்து சென்ற முதியவர் கிருஷ்ணசாமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோர் தேடிப்பார்த்தபோது, முதியவர் கிருஷ்ணசாமி வைப்பாற்றில் சடலமாக மிதந்துள்ளார்.இதனை அடுத்து கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.