விளாத்திகுளம் அருகே 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி - அங்காள பரமேஸ்வரி தம்பதியினரின் மகள் உமா மகேஸ்வரி (16). இச்சிறுமி பிறப்பில் இருந்தே மனவளர்ச்சி குன்றிய நிலையில் பள்ளி எதுவும் செல்லாமல் பெற்றோரது அரவணைப்பில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில்,
இன்று மாலை 4 மணியளவில் உமா மகேஸ்வரியின் தாய் அங்காள பரமேஸ்வரி துணி துவைப்பதற்காக அக்கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் சென்ற சிறுமி உமாமகேஸ்வரி அவரது தாயின் அருகே அமர்ந்திருந்த நிலையில் திடீரென மாயமாகி உள்ளார். சிறுமியின் தாய் தனது மகள் உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்று இருப்பதாக நினைத்துக்கொண்டு துணிகளை துவைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது உமா மகேஸ்வரி வீட்டிலும் இல்லாததைக் கண்டு அச்சமடைந்த தாய் அங்காள பரமேஸ்வரி தனது மகளை தேட தொடங்கியுள்ளார். அப்போது கிராம மக்கள் சிறுமி உமா மகேஸ்வரி கண்மாயில் இறந்து கிடப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர் அங்கு சென்று பார்த்த சிறுமியின் தாய் அங்காள பரமேஸ்வரி தனது மகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுமியின் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மன வளர்ச்சிக்கு குன்றிய 16 வயது சிறுமி உமா மகேஸ்வரி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்போது மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vilathikulam
16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!
அடுத்த
களேபரமான கிராமசபைக் கூட்டம்!கிளார்க் மீது பணம் கையாடல் புகார்?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026