விளாத்திகுளம் அருகே  பன்னிரண்டாம் வகுப்பு மாணவி  பாலியல் வன்கொடுமை செய்து கொலை : கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த  (17) சிறுமி இவர் குறுக்குச்சாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார், 




இந்நிலையில் நேற்று இரவு  வீட்டின் அருகே காட்டுப்பகுதிக்கு   இயற்கை உபாதைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், இன்று மாலை 4 மணியளவில்  வேடநத்தம் காட்டுப்பகுதியில்  ஆடைகள் களைந்த நிலையில்  சிறுமி சடலமாக கிடந்துள்ளார், இதனை அடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார்  சிறுமியின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்க முயன்ற நிலையில், வாகனத்தை மறித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி  தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




தற்போது சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.