விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கொலை.:குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்-முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த ( 17 ) வயது சிறுமி ,இவர்  குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதி வந்த நிலையில் மார்ச் 10 ஆம் தேதி  மாலை 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை  குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த போலீஸார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். 


இதையடுத்து  மார்ச் 11ஆம் தேதி காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே,மார்ச் 11ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோர்  மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குளத்தூர் - குறுக்குச்சாலை -  சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். 



மாணவியின் வீட்டில் முறையான கழிவறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ஆட்சி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதனை தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

இந்த நிலையில் தான் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று மார்ச் 10ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் காணாமல் போய் உள்ளார்.இதையடுத்து மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறி குடும்பத்தினரை அலைக்கழித்துள்ளனர். 

உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை உயிருடன் மீட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் புகார் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்துள்ளனர்.  இதற்கிடையில் மதியம் பொதுமக்கள்  மாணவி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்டுள்ளனர்.தற்போது வரை குற்றவாளியை கைது செய்யாததால்  கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்துள்ளது, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் கூறினார்.

மேலும், பெற்றோரின் சம்மதம் பெறாமல் மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது, இதற்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


வேடநத்தம் கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்திற்கே ஏற்பட்ட இழப்பாக மக்கள் கருதுகின்றனர்.எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கடம்பூர் ராஜு வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப் பணிகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.