விளாத்திகுளம் அருகே  நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76வது குடியரசு தின விழா !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, கல்லூரியின் முதல்வர் முனைவர் H.B. ராமலிங்கம் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் அவர்களை வரவேற்று கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வரவேற்புரை ஆற்றினார். 

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் முனியசாமி, தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராஜா, சங்கர் வணிக மேலாண்மை துறை தலைவர்முனைவர். தினேஷ்,வணிகவியல் துறை தலைவர் முனைவர் அசோக்குமார்,தமிழ் துறை தங்கமாரிமுத்து, ஆங்கிலத்துறை பூமிநாதன், வணிகவியல் துறை ராமநாத்நரேன், வணிகமேலாண்மை, சசிகலா, கணனி அறிவியல் துறை மற்றும்அலுவலகப் பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஆல்டிரின் அதிசயராஜ் செய்திருந்தார்.