விளாத்திகுளத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் 7 இளைஞர்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களுக்கு கஞ்சா பழக்கமே மூலதனமாக இருப்பதால்தான் அதிக குற்றங்கள், கொலை குற்றங்கள் நடைபெற்று வருகின்றன என, சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி நாளிதழ்களில் வெளியாகி வருகின்றனர், அப்படி வெளியாகும் செய்திகளுக்கு மாவட்டக் காவல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கங்கள் இல்லை என்று செய்து குறிப்பு வெளியிடுவது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்று பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் 13 பேர் குண்டு கும்பல் மாறி மாறி தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர், இதனை அடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அடிதடியில் ஈடுபட்ட முதல் தரப்பு A காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ராமர் மகன் முகேஷ்(20), அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் யுவராஜ் பாலமுருகன் மற்றும்(16) வயது உடைய ஒரு சிறார் என ஒரு பிரிவினரையும்,
B எதிர்தரப்பான விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த எட்டப்பன் மகன் கார்த்திக்(19), போலீஸ் லயன் பகுதியை சேர்ந்த சக்தி என்பவரின் மகன் ராகேஷ் (19), கேசவன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கரன் (18), முத்து காமாட்சி என்பவரின் மகன் காசி(20), முனியசாமி என்பவரின் மகன் பிரதாப் (20) மற்றும் 15 வயது உடைய சிறார் உட்பட 13 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்.
இதில் B தரப்பில் உள்ள ராகேஷ் என்பவர் தூத்துக்குடியில் இருந்து கஞ்சாவை வாங்கி விளாத்திகுளம் பகுதியில் விற்பதாக காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்ததாக, A தரப்பில் உள்ள முகேஷ் என்பவர் தான் என்று நினைத்து நினைத்துக்கொண்டு, முகேஷ் இரவு 12 மணியளவில் வைப்பார் ஆற்றுக்குள் அடிப்பதற்கு அழைத்து சென்ற போது இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட அடிதடியில் ஒரு சிலருக்கு சட்டை கிழிந்து சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கஞ்சா விற்பனை அடிதடி தொடர்பாக கார்த்திக் (19), ராகேஷ் (19), மருதுபாண்டி (20), பிரதாப் (20), முகேஷ்(20), கலைச்செல்வம் (20), பாலமுருகன் (20) ஆகிய 7 பேரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட சிறையான பேராவூரணி சிறையில் அடைத்தனர்.