எட்டையபுரத்தில், 61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா கொண்டாட்டம்!
மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில், பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் 2 நாட்கள் பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போன்று இன்றும், நாளையும் என "61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா" சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழாவின் முதல் நாளான இன்று (23.09.2023) மாலை மகாகவி பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணி மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் "பாரதியின் தாகமும் தவிப்பும்" என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில், தேவராட்டம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தினர், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
Vilathikulam
எட்டையபுரத்தில், 61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா கொண்டாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கூட்டுறவு வங்கியின் காசோலைகளை மோசடி செய்த 3 பேர் கைது .
அடுத்த
75 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026