எட்டையாபுரம் ஆட்டுசந்தையில் ரூ, 1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை வைத்து ஆடுகள் வாங்கிய 6 பேர் கைது!
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் வாராந்திர ஆட்டுசந்தையில் மதுரை திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர், எட்டையாபுரம் சந்தையில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்டு வியாபாரிகளிடம் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கொடுத்து, ஆடுகளை வாங்கி உள்ளனர், இதில் அந்த கும்பல் 10000 ரூபாய் மதிப்பு பெறும் ஆடுகளை ரூபாய் 120000 வீதம் கூடுதலாக 2000 வைத்து தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகளிடம் ஆடுகளை வாங்கியுள்ளனர், ஆட்டின் தொகையை விட குறைவாகவே கேட்டு ஆடுகளை வாங்குவதை பார்த்திருக்கும், ஆனால் இவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் கூடுதலாக 2000 வாங்கியது அங்கு இருந்த ஆட்டு வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது, இதனை அடுத்து அங்குள்ள ஆட்டு வியாபாரிகள் உடனடியாக எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த எட்டையாபுரம் போலீசார் கள்ள நோட்டுகளை வைத்து ஆடுகளை வாங்கிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், முதல் கட்ட விசாரணையில் அவர்கள் மதுரை - திருமங்கலம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் எட்டையாபுரம் போலீசார் அவர்களை பிடித்து , இவர்கள் இங்கு மட்டும்தான் கள்ள நோட்டுகளை கொண்டு வந்தார்களா அல்லது இதற்கு முன்னபும் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளனரா? என்பது குறித்தும், அல்லது தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் யாரும் இதில் தொடர்பு உள்ளனரா? என்பது குறித்தும் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்த பட்ட இயந்திரம் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.