கமுதி அருகே ஒன்றோடு ஒன்று சீறிப்பாய்ந்த 53 ஜோடி மாட்டு வண்டிகள்!


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மநேந்தல் கிராமத்தில் ஸ்ரீ குருநாத சுவாமி 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் பெரியநாச்சி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு 4 பிரிவுகளாக  மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.


இதில் பெரியமாடு வண்டி பந்தயத்தில் 6 மாட்டுவண்டிகள்,சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் 22 வண்டிகள், தேன்சிட்டு மாட்டு பந்தயத்தில் 15 வண்டிகள் என மொத்தம் 53 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.


இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.


இந்த மாட்டுவண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.