விளாத்திகுளம் அருகே 5000 ஏக்கரில்  பயிரிடப்பட்டிருந்த உளுந்து,பாசி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கனமழை வெள்ளத்தால்  பாதிப்பு!




தற்போது தமிழக முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், மாதலாபுரம், பூதலாபுரம், சேர்வைக்காரன் பட்டி சங்கரப்ப நாயக்கன்பட்டி, கட்டைதலைவன் பட்டி,சென்னம்பட்டி, துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், மாவிலோடை, சின்னூர்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்  இந்தாண்டு மானாவரி நிலத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய்,வெங்காயம்,உளுந்து,பாசி,கம்பு மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் தற்போது பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது,அதே போல் விலை நிலங்கள் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது, நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வாராததால், மழை வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.