*எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி இருந்த கனரக வாகனங்களில் இருந்து டீசல் திருடியவர் கைது - 50 லிட்டர் டீசல் மற்றும் ஒரு மினி சரக்கு வாகனம் பறிமுதல்.*

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. வசந்தி தலைமையிலான போலீசார் நேற்று (14.07.2023) எட்டையாபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு எடைமேடை  நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் உள்ளே சட்ட விரோதமாக 50 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் அந்த வாகனத்தின் ஓட்டுனரான எப்போதும்வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பொன்ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பொன்ராஜ் மற்றும் சிலர் அப்பகுதிகளில் நிறுத்தியுள்ள கனரக வாகனங்களில் இருந்து டீசலை திருடி அதை சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.*

*இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரி பொன்ராஜை கைது செய்து 50 லிட்டர் டீசல் மற்றும் மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.*

*மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*