லட்சம் பேர் கூடியதால் ஆங்காங்கே 40 பேர் உயிரிழந்தனர்: விஜயை சாடிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டயேன்!





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பனிரெண்டாவது மாவட்ட மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கலந்து கொண்டு பேசும் பொழுது  லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் ஆங்காங்கே 40 பேர் உயிரிழந்தனர், ஒரு தகவலை முறையாக செயல்படுத்த அதன் ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்பட்டது என கரூர் மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விஜய்யை சூசகமாக சாடினார்.


நாட்டின் முதுகெலும்பும் மகாத்மா காந்தி என்பது போல், தற்போது எழுத்தாளர்களும், விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பாக  உள்ளனர் என்று புகழாரம் சூட்டி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கலை இலக்கிய இரவில்  தப்பாட்டம்,தேவராட்டம், சிறுவர்,சிறுமியர்களின்  சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள்,தற்போது தமிழகத்தின் மதுவினால் சீரழியம் குடும்பங்கள் குறித்தான சிறிய நாடகம் நடைபெற்றது.



அதேபோல் நிகழ்ச்சியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர்  பா.சேகர் ஆசிரியரின் நினைவுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பகிர்ந்து கொண்டார்.



நிகழ்ச்சிக்கான வரப்புரையை முகமது ஜக்காரியா வழங்கினார், மாநாட்டுத் தொடக்க உரையை சாகித்ய அகாடமியின் பாலபுஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர்  உதயசங்கர் வழங்கினார், வாழ்த்துரையை கலை உடையார் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டம் மற்றும் புதுப்பட்டி ராமகிருஷ்ணன் சமூக அலுவலராகியோர் வழங்கினர். மாநாட்டின் நிறைவுறையை எழுத்தாளர் சா. தமிழ்ச்செல்வன் வழங்கி முடித்தார்.