பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 பெண்கள் கலந்து கொண்ட  மெகா கோலப்போட்டி : ஆப்ரேஷன் சிந்தூர், பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் -3 ராக்கெட் உள்ளிட்டவைகளை கோலமிட்டு அசத்திய  பெண்கள்!





இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நோக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில்  பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெண்களுக்கான மாபெரும் மெகா கோலப் போட்டி நடைபெற்றது, 500 மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த கோலப்போட்டியில்  எட்டையாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு  பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர், சந்திரயான்-3 ராக்கெட்,தமிழ் கடவுள் முருகன்,போதைப் பொருள் இல்லாத பாரதம்,சுவாமி விவேகானந்தர், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை பெண்கள் வண்ண கோலங்களாக வரைந்து காட்சிப்படுத்தினர், இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு  LED TV, மிக்ஸி,கேஸ் ஸ்டவ் மற்றும் ரொக்க பணம் ஆகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது., அதேபோல் போட்டியில் கலந்து கொண்ட 350 பெண்களுக்கும்  ஆறுதல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.




இதற்கு முன்னதாக காலையில் போதைப் பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இனி மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.