விளாத்திகுளம் அருகே தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக்கட்சிக்களை சேர்ந்த 35 பேர் த.வெ.கவில் இணைந்தனர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு எட்டயபுரம் தாலுகா நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் மகளிர் தினத்தையொட்டி தி.மு.க,பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்த ராமுத்தாய், சுமதி, நிஷா மாமி, கவிதா, பாரதி, மாரீஸ்வரி ஆகியோர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக 35 பேர் இணைந்தனர், கூட்டத்தில் எட்டயபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும், நகரில் பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும், எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மாரிமுத்து, விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.