அதிமுகவின் கடந்த பத்தாண்டு ஆட்சியில்  ஒரு கள்ளச்சாராய  உயிரளப்பு நடக்கவில்லை ஆனால் கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் 310 பேர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துள்ளனர் விளாத்திகுளம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில்  நடைபெற்ற அதிமுக பூத் பாகம் கிளை நிர்வாகிகள் ஆன்லைன் நிர்வாகிகள் நேரில் ஒருங்கிணைந்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமையில்  நடைபெற்றது, அப்போது அவர் பேசுகையில் கடந்த 10 ஆண்டு  அதிமுக ஆட்சியில்  ஒருவர் கூட கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது கிடையாது, வீதிக்கு வீதி பேசிய கனிமொழி MP அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அதிகப்படியான இளம் விதவைகள் அதிகமாகி உள்ளனர் என குற்றம் சாட்டிய கனிமொழி MP, தற்போது கடந்த திமுக ஆட்சியில் நான்காண்டில் மட்டும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில் இதுவரை 310 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.



அதனைத் தொடர்ந்து பேசுகையில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்றைக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் என்று கூறி வருகிறார், நாங்களும் கூறுகிறோம் போதைப் பொருள் நடமாட்டத்தில் நம்பர் ஒன், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் ஒன், விலைவாசி உயர்வில் நம்பர் ஒன், மின்சாரம் பால் விலை உயர்வு, விவசாயிகள்,அரசு ஊழியர்களை ஏமாற்றுவதில் திமுக அரசு நம்பர் ஒன் என திமுக அரசு மீது தொடர்ந்து கடம்பூர் ராஜு  குற்றம் சாட்டினார்.




இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, கீழஈரால் கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு  நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.