விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் மேல்நிலைப்பயிலும் 31 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகளை புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி, செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வ வடிவேல்,செங்கோட்டை கிளைக் கழக செயலாளர் கருப்பசாமி, புதூர் மத்திய ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, மூக்கன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.