தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது.
தூத்துக்குடி திருச்செந்தூர்சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, தூத்துக்குடி அந்தோணியாரபுரம் பகுதியை சேர்ந்த வெட்டுராஜா (39), டு வின்ஸ்டன் (53), மணிகண்டன்(47) ஆகிய 3 பேரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.